பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 4, 2021, 5:27 PM IST

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் நீர்மட்ட உயரம் 105 அடியும், நீர் இருப்பு 32.8 டிஎம்சி ஆகவும், நீர்வரத்து 300 கன அடியாக இருந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தற்போது அணையின் நீர்மட்டம் 88.37 அடியாகவும், நீர் இருப்பு 20.48 டிஎமசி ஆகவும், நீர்வரத்து 4 ஆயிரம் 511 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. கோடை வெயிலால் வறண்டுபோன வனப்பகுதி தற்போது பெய்த மழையால் துளிர் விட ஆரம்பித்துள்ளது. மேலும் அணையின் நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.