மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி! - virudunagar latest news
🎬 Watch Now: Feature Video

விருதுநகர் மாவட்டத்தில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி, சாட்சியாபுரம் சிஎஸ்ஐ செவித்திறன் குறைபாடுடையோர் உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் சைகை மொழி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ரா. கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாற்றுதிறனாளிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், மாதிரி வாக்குப்பதிவு மேற்கொண்டு தங்களுடைய சந்தேகங்களைத் தெளிவுப்படுத்தி கொண்டனர். முன்னதாக வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினைத் தொடங்கிவைத்த ஆட்சியர், செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளி மாணவியர் மூலம் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலத்தினைப் பார்வையிட்டார்.