அதிருப்திகளுக்கு இடையே ஹாட்ரிக் வெற்றி பெற்ற விஜயதாரணி! - சட்டசபை தேர்தல் வெற்றியாளர்கள்
🎬 Watch Now: Feature Video
தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்திவரும் விளவங்கோடுத் தொகுதியில் போட்டியிட இம்முறையும் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டது. இரண்டு முறை தொடர்ந்து வெற்றிபெற்றிருந்தாலும், சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், சொந்த கட்சியினரின் எதிர்ப்பை மீறி வேட்பாளராக விஜயதாரணி அறிவிக்கப்பட்டார். அதிருப்தி வேட்பாளர்கள், எளிமையான பாஜக வேட்பாளர் என கடும் சவாலுக்கு மத்தியில் விஜயதரணி தேர்தல் களம் கண்டார். பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், ஹாட்ரிக் வெற்றியை தன் வசமாக்கினார் விஜயதாரணி.