வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறப்பு! - Bird Sanctuary Vedanthangal
🎬 Watch Now: Feature Video
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று (ஜன.10) முதல் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. பல நாடுகளிலிருந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், தற்போது இங்கு குவிந்துள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு சரணாலயம் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பார்வையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து தேவையான சமூக இடைவெளியை பின்பற்றி, பறவைகளைக் கண்டு ரசிக்கலாம் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Last Updated : Jan 10, 2021, 7:53 PM IST