மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை - வைகை அணை
🎬 Watch Now: Feature Video
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, முழு கொள்ளவை எட்டியதால் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியை தாண்டி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் வைகை அணையை ஒட்டியள்ள நீர்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாகவும், வெளியேறும் உபரி நீரும் சேர்ந்து வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.