கியாரே செட்டிங்கா? - ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிப்பு - traffic in sathyamangalam asanur as elephant blocks road
🎬 Watch Now: Feature Video
சத்தியமங்கலம் ஆசனூரை அடுத்த காராப்பள்ளம் என்ற இடத்தில் ஒற்றை யானை சாலையின் குறுக்கே நின்று மரத்தின் இலைகளை பறித்து தின்றுகொண்டிருந்தது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் நின்றுவிட்டன. எதிரே லாரி ஒன்று வருவதை பார்த்து ஆத்திரமடைந்த யானை லாரியை துரத்தியது. இதனால் பயந்துபோன வாகன ஓட்டிகள் வாகனங்களை பின்னோக்கி நகர்த்தினர். நீண்ட நேரமாக யானை போகாமல் அங்கேயே நின்று கொண்டிருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வனத்துறையினர் வந்து யானையை காட்டுக்குள் விரட்டினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.