கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்! - கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்
🎬 Watch Now: Feature Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் 104. 44,கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, முன்னாள் அமைச்சர் மோகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் குமரகுரு, பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.