டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு - திருவாரூர் விவசாயிகள் டிராக்டர் பேரணி - track rally protest
🎬 Watch Now: Feature Video
திருவாரூர்: தமிழ்நாடு முழுவதும் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஒன்றிணைந்து டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருத்துறைப்பூண்டி -வேதாரண்யம் சாலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 200க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் தேசியக் கொடியை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, காவல்துறையினர் போராட்டக் குழுவினரை தடுத்து நிறுத்தியதால் விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.