வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி - ஆங்கில புத்தாண்டு 2022
🎬 Watch Now: Feature Video
நாகை: நள்ளிரவு 12 மணிக்கு வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் உள்ள திறந்த வெளி கலையரங்கமான சேவியர் திடலில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து புத்தாண்டை வரவேற்கும் விதமாக வாணவேடிக்கை நடந்தது. பின்னர் 2021ஆம் ஆண்டில் நடந்த நல்ல நிகழ்வுகளை நினைவு கூர்ந்து தீய நிகழ்வுகள் புதிய ஆண்டில் நடைபெறாமல் இருக்க பிரார்த்தனை செய்து உலக மக்கள் கரோனா தொற்றில் இருந்தும், புதிதாக பரவிவரும் ஓமைக்ரான் தொற்றிலிருந்து விடுபட்டு இன்புற்று வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது.