தை அமாவாசை: திருக்கடையூர் அம்மன் நிகழ்த்திய பெளர்ணமி திருவிளையாடல் - தை அமாவாசையை முன்னிட்டு திருக்கடையூர் அம்மனுக்கு 1008 பால்குட அபிஷேகம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14336761-thumbnail-3x2-dbsd.jpg)
மயிலாடுதுறை: முன்னொருகாலத்தில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஷ்வரர் ஆலயத்துக்கு வந்த சரபோஜி மன்னரிடம், பௌர்ணமி தினம் என்று தவறுதலாக அபிராமிபட்டர் கூறினார். அன்று பௌர்ணமி வரவில்லை என்றால் மரணதண்டனை விதிக்கப்படும் என்று மன்னர் கூறினார். இதனையடுத்து அபிராமி பட்டர் எரியும் நெருப்பிற்கு மேலே ஊஞ்சல் அமைத்து அபிராமி அம்மனை நினைத்து அபிராமி அந்தாதியை பாடினார். 100 கயிறுகள் கொண்ட ஊஞ்சலில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கயிறாக அறுத்துக்கொண்டு வரும்போது 79ஆவது பாடலான “விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன " என்ற பாடலை பாடினார். அப்பொது அம்மன் நேரில் தோன்றி தனது தோடினை வீசி எறிந்து முழுநிலவை தோன்றச்செய்து அபிராமி பட்டருக்கு அருள் வழங்கியதாக ஆலய வரலாறு கூறுகின்றது.
அதன்படி தை அமாவாசையான நேற்று நள்ளிரவு அம்மன் முன் பட்டரின் சிலை அமைக்கப்பட்டு ஓதுவார்கள் ஒவ்வொரு பாடலாகப் பாடினர். ஒவ்வொரு பாடலுக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 79 பாடலின் முடிவில் நிலவு போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்கு எரியவிடப்பட்டது. தொடர்ந்து அம்பாளுக்கு மஹா தீபாராதனை நடத்தப்பட்டு 100 பாடல்கள் பாடி நிறைவுசெய்யப்பட்டது.
Last Updated : Feb 1, 2022, 5:40 PM IST