மகள் முன்பே தந்தையை வெட்டிக் கொன்ற கும்பல்... அதிர்ச்சியில் உறைய வைக்கும் சிசிடிவி காட்சி! - advocate murder
🎬 Watch Now: Feature Video
திருச்சி: பீமநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபி கண்ணனை நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரது வீட்டின் அருகே சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்தக் கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த கண்ணனை, ஐந்து பேர் சுற்றிவளைத்து இந்த காட்சியில் வெட்டுகின்றனர். மகள் முன்பே தந்தை படுகொலை செய்யப்படும் இந்தக் காட்சி காண்போரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.