கழிவு நீர் கலந்த லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள்! - கழிவு நீர் கலந்த வந்த லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள்
🎬 Watch Now: Feature Video
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள அம்பாள் ஏரிக்கு மழைக்காலத்தில் ஊத்துமலையிலிருந்து மழை நீர் ஓடை வழியாக செல்வது வழக்கம். இந்நிலையில் ஏரிக்கு வரக்கூடிய ஓடையில் அடையாளம் தெரியாத நபர்கள் இரவு நேரங்களில் ஆலைக் கழிவுகளை லாரி மூலம் கொண்டு வந்து ஓடையில் கலப்பதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், கழிவுநீர் கலக்க வந்த லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Last Updated : Nov 27, 2021, 5:18 PM IST