குரங்குகளுக்கு உணவளித்த வருவாய்த்துறையினர்! - அழகர்மலை
🎬 Watch Now: Feature Video
மதுரை அழகர்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலையில் வசிக்கும் குரங்குகளுக்கு வாழைப்பழம், பொரி போன்ற உணவுப் பொருட்கள் வழங்குவது வழக்கம். தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கால், அழகர்மலையில் திரியும் குரங்குகள் உணவின்றித் தவித்து வருகின்றன. இதுகுறித்து தகவலறிந்த கொட்டாம்பட்டி வருவாய் ஆய்வாளர் முருகானந்தம், தனது வருவாய்த்துறை நண்பர்கள் மூலம் நிதி திரட்டி, வாழைப்பழம், பொரி போன்ற உணவுகளை மலையில் வசிக்கும் குரங்குகளுக்கு வழங்கினர்.