தொடக்க கல்வித்துறை குழப்பங்களைத் தீர்க்க மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை! - சென்னை அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
முதலமைச்சராக பதவியேற்கவுள்ள ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் தாஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தால், தொடக்கக் கல்வித்துறையில் உருவாகியுள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் உள்ளிட்ட பிரச்னைகளை களைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.