ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு! - Revenue Department
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பருத்திப்பட்டுப் பகுதியில் உள்ள சுமார் 1.81 ஏக்கர் பரப்பளவு கொண்ட தட்டான்குளத்தில் சுமார் 40 சென்ட் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரியவந்ததன் அடிப்படையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறையினர் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் 8 கடைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் அனைத்தையும் வட்டாட்சியர் சரவணன் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றினர்.இதன் மூலம் 5 கோடி மதிப்புள்ள 40 சென்ட் அரசு நீலம் மீட்கப்பட்டுள்ளது.
TAGGED:
trivallur, avadi