உதகையில் மீண்டும் மழை - தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி - rain again
🎬 Watch Now: Feature Video
உதகையில் காலை முதல் வெயில் வாட்டிய நிலையில், பிற்பகலில் திடீரென மழை பெய்தது. தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மழை தேயிலை விவசாயிகளுக்கு உகந்ததாக இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் உதகையில் மீண்டும் குளு குளு காலநிலை திரும்பியுள்ளது.