’முதலமைச்சருக்கு நன்றி' - அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் மூலம் பணியில் சேர்ந்த அர்ச்சகர்! - Madurai latest news
🎬 Watch Now: Feature Video
”அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற திட்டத்தின் அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் கையால் பணி ஆணை பெற்ற மதுரை ஆனையூர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் உப கோயிலான அருள்மிகு தேரடி கருப்பசாமி திருக்கோயிலில் அர்ச்சகராக பணியைத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், பணி ஆணை பெற்ற அருண்குமார் மகிழ்ச்சியுடன் முதலமைச்சருக்கும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.