கரோனா விழிப்புணர்வு: அம்மன் வேடமிட்ட காவல் ஆய்வாளர்!
🎬 Watch Now: Feature Video
நாகப்பட்டினம்: கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நாகை நகரக் காவல் ஆய்வாளர் பெரியசாமி பத்ரகாளி வேடமிட்டு முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால் மட்டுமே கரோனா என்னும் அரக்கனை வதம் செய்ய முடியும் என்பதை உணர்த்தும் விதமாக, மும்மதங்களைச் சேர்ந்த கடவுள் கரோனாவை வதம் செய்து அழிப்பதுபோல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.