மதுபோதையில் குத்தாட்டம் போட்ட பேரூராட்சி செயல் அலுவலர்: வீடியோ வைரல்...! - official dance video
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டம் சோலூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வரும் மணிகண்டன், தனது நண்பருடன் வனத்துறையினரால் தடைசெய்யப்பட்டு வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் வாகனத்தை நிறுத்திவிட்டு மதுபோதையில் குத்தாட்டம் போட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அறியாமையால் வாகனங்களை நிறுத்தினால் அபராத தொகை விதித்து கடும் எச்சரிக்கை விடும் வனத்துறையினர், ஒரு அரசு உயர் அலுவலர் என்பதால் இவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுபோதையில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.