பாம்பன் பாலம்: பொறியியல் பிரமாண்டம்! - பாம்பன் பாலம் ஆபத்தா
🎬 Watch Now: Feature Video
மனிதர்களை வியப்பில் ஆழ்த்தி, விழி விரியவைக்கும் வித்தை இயற்கைக்கு மட்டும் இல்லை என்பதை உணர்த்தி நிற்கிறது மனிதப் பேராற்றலில் உருவான பாம்பன் ரயில் பாலம். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும் பாம்பன் தீவையும் இணைத்து கடல் அன்னையின் மடியில் 2.06 கிமீ நீண்டுகிடக்கும் இந்தப் பாலம், இந்திய ரயில்வேயின் அடையாளம். இந்தியாவையும் இலங்கைத் தீவையும் இணைக்க ஆங்கிலேயர் தீட்டிய திட்டத்தில் உருவான பாம்பன் ரயில் பாலம், புயல்கள் உருவாகும் பகுதியில் அமைந்துள்ளது. 1964ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் நள்ளிரவில் உருவாகி தனுஷ்கோடியை தின்று தீர்த்தப் புயலையும் அசாதாரணமாய் கடந்து, இன்றும் கம்பீரமாய் நிற்கும் பாம்பன் ரயில் பாலம் என்றும் ஒரு பொறியியல் பிரமாண்டமே.