பெண்களுடன் இணைந்து வயல்வெளியில் நடவு நட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்! - தேர்தல் பிரச்சாரம்
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று (மார்ச்.14) மதியம் வயல் வெளிகளில் நடவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். விவசாயத்தில் ஈடுபடும் பெண்கள் தெம்மாங்கு பாட்டு பாட, அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது மகள் ரிதன்யா பிரியதர்ஷினியுடன் வயல்வெளியில் இறங்கி நடவு நட்டு அசத்தினர்.