குமரியில் கனமழை: மாத்தூர் தொட்டிப் பாலத்தில் நீர் நிரம்பிவழியும் காட்சி - கன்னியாகுமரியில் கனமழை
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்றிரவு (நவம்பர் 12) முதல் தொடர் மழை பெய்துவருகிறது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக ஆசியாவின் மிக நீளமான கன்னியாகுமரி மாத்தூர் தொட்டிப் பாலம் முழுவதும் நீர் சூழ்ந்துள்ளது. தற்போது பாலத்திலிருந்து நீர் நிரம்பி கீழே விழுகிறது. பிரமாண்ட உயரத்திலிருந்து நீர் நிரம்பி விழும் காட்சி பார்ப்பதற்கு ரம்மியமாக இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் காணொலி எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கிவருகின்றனர்.