தொடர் மழையிலும் கொடைக்கானலில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்...! - மழையில் புகைப்படம்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: கொடைக்கானலில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே, பொங்கல் விடுமுறையொட்டி சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கொடைக்கானலில் அலைமோதுகின்றனர். மேகமூட்டம் சூழ்ந்துள்ள நிலையில் ஏரியில் படகு சவாரி செய்தும், புகைப்படம் எடுத்தும் சுற்றுலாப் பயணிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரையண்ட் பூங்கா, ஏரிச்சாலை உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் மழையை பொருட்படுத்தாமல், சுற்றுலாப் பயணிகள் குடைபிடித்து செல்கின்றனர்.