சத்தியமங்கலத்தில் கன மழை: விவசாயிகள் மகிழச்சி! - Heavy rain in Satyamangalam
🎬 Watch Now: Feature Video
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று (ஆக்.24) சத்தியமங்கலததின் வனப்பகுதி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான காற்றுடன் கனமழை பெய்ததால், இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் வெயிலில் வாடிய செடிகள் நீர்நிறைந்து காணப்பட்டது. சுமார் 1 மணி நேரமாக மழை பெய்ததினால் விளை நிலத்தில் ஈரப்படும், அது விவசாயத்திற்கு பேருதவியாக இருக்கும் என பவானிசாகர் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.