கன்னியாகுமரியில் தொடர்ந்து பெய்யும் மழை - விவசாயிகள் வேதனை
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரியில் இரவு பகலாக இடைவிடாது பெய்துவரும் மழையால் குமரி மாவட்டத்திலுள்ள அணைகள், குளங்கள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் அதிக மழை காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுக்கிராமம் பகுதியில், நெல் விவசாயம் நடைபெறும் பகுதிகளில் வரப்பு அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் சரிந்து தண்ணீரில் மூழ்கி காணப்படுகின்றன. இதனால் இந்த நெற்பயிர்கள் அழுகி கதிரில் இருக்கும் நெல் முளைக்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.