ராமேஸ்வரத்தில் 2 மணி நேரங்களுக்கு மேலாக கொட்டி தீர்த்த மழை! - rain in ramanathapuram
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம்: தற்போது கோடைக்காலமாக இருந்தாலும், கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் ராமநாதபுரம் நகர், மண்டபம் பாம்பன், ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்ததால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இதனால் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.