கன்னியாகுமரியில் கனமழை: மலைப்பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பு - Heavy rain in kanyakumari
🎬 Watch Now: Feature Video

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதன் காரணமாக மலைப்பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு 1,700 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கோழிப்போர்விளை, முள்ளங்கினாவிளை பகுதிகளில் தலா 52 மிமீ, சிவலோகத்தில் 47 மிமீ, பேச்சிப்பாறையில் 42 மிமீ, ஆனைக்கிடங்கு பகுதியில் 40 மிமீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.