சிக்கன் 65 கடையில் ஏற்பட்ட அதி பயங்கர சிலிண்டர் வெடிப்பு! - gas cylinder blast in namakkal
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8733157-1066-8733157-1599632907241.jpg)
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த திருமணிமுத்தாறு ஆற்றுப்பாலம் அருகே மதியம்பட்டியைச் சேர்ந்த கோபால் (23) என்பவர் அசைவ உணவகத்தை நடத்திவருகிறார். நேற்றிரவு (செப்.8) கடையில் சிக்கன்65 தயார் செய்ய சமையல் எரிவாயு அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடை முழுவதும் எரிந்து நாசமானது. நல்வாய்ப்பாக கடையில் இருந்தவர்கள் வெளியே ஓடியதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதனைத் தொடர்ந்து மல்லசமுத்திரம் காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.