கோயில் யானை பராமரிப்பு குறித்து வனத்துறையினர் ஆய்வு - forest officers inspect temple elephant
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை, திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ அபயாம்பிகை சமேத ஸ்ரீ மாயூரநாதர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அபயாம்பாள் என்ற யானை பாராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கரோனா ஊரடங்கால் யானை கொட்டகையிலேயே இருந்து வருகிறது.
இதையடுத்து இந்து சமய அறநிலைத்துறை மண்டல அலுவலர் அசோக் குமார் தலைமையில் வனத்துறையினர், கால்நடை பாராமரிப்பு மருத்துவர் முத்துகுமாரசாமி ஆகியோர் கோயிலில் யானை முறையாக பராமரிக்கப்படுகிறதா, தேவையான அளவு அதற்கு உணவு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து யானைக்கு பழங்கள் வழங்கினர்.
யானைகள் பராமரிப்பது குறித்து யானைப்பாகன் செந்திலுக்கு ஆலோசனைகள் வழங்கியும் சென்றனர்.