வெளுத்து வாங்கும் மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு! - western ghats rain
🎬 Watch Now: Feature Video
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் அமைந்துள்ளது, பஞ்சலிங்க அருவி. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்படும் போது பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும். ஒருவேளை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் 6 மாத காலத்திற்கு நிலையான நீர்வரத்து ஏற்படும் சூழல் உருவாகும். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று (செப்.,6) மாலையில் கனமழை பெய்ததால், பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளைத் தாண்டி வெள்ளம் பாய்ந்துவருகிறது.