திருவண்ணாமலையில் 500 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் - திருவண்ணாமலையில் ஐநூறு கிலோ எடை பிளாஸ்டிக் பறிமுதல்
🎬 Watch Now: Feature Video

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில், நகராட்சி ஆணையாளர் நரேந்திரன் மேற்பார்வையில் இன்று (ஜன. 12) நகர் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து நகராட்சி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல துணிக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட நான் ஓவன் கட்டை பைகள், பிளாஸ்டிக் கேரிபேக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து 500 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து 28, 000 ரூபாய் அபராதம் விதித்தனர். உணவகங்கள், பல்வேறு கடைகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது.