கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்! - Nellai District News
🎬 Watch Now: Feature Video

திருநெல்வேலி மாவட்டம் பழவூரை சேர்ந்த தாஸ் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று (அகஸ்ட் 27) வழக்கம்போல் தாஸ் தனது ஆடுகளை மேய்க்க சென்றபோது, அப்பகுதியில் உள்ள அவரது கிணற்றில் ஆடு ஒன்று தவறி விழுந்தது. இதை கண்ட தாஸ் அக்கம் பக்கத்தினரை அழைத்தார். பின்னர், அவர்கள் வள்ளியூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி ஆட்டை பத்திரமாக உயிருடன் மீட்டனர். அதன் பின்னர் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்களை, பொதுமக்கள் பாராட்டினர்.