குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா! - farmers grievance meeting
🎬 Watch Now: Feature Video
நாகை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சம்மந்தம் வேதாந்தா, ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு அளிக்கபட்ட அனுமதி, பயிர் காப்பீட்டுத்தொகை உள்ளிட்ட பிரச்னைகள் பற்றிப் பேசினார். மேலும் போராட்டங்கள் நடத்தியவர்களை காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் தரக்குறைவாக பேசுவதாகக்கூறி தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தை விலக்கி கொண்டனர்.