தண்ணீர் பிரச்னை இனி இருக்காது! விவசாயி பாலகிருஷ்ணனின் சீரிய கண்டுபிடிப்பு!
🎬 Watch Now: Feature Video
நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் அருகே கீழவெளி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி பாலகிருஷ்ணன். மழைநீர் சேமிப்பு திட்டத்தில் பலருக்கும் முன்னோடியாக இருந்து வருகிறார் இவர். பூமிக்கு அடியில் உள்ள நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுப்பது போன்று, நீர் மூழ்கி மோட்டாரில் உள்ள ’நான் ரிட்டன் வால்வை’ (Non Return Volve) நீக்கிவிட்டால், அந்த மோட்டார் மூலமாகவே நீரை நிலத்துக்கு அடியில் சேமிக்க முடியும் என்பதைக் கண்டறிந்து, மழைநீரைச் சேமிக்கலாம் என்பதையும் தெரிந்துகொண்டார் விவசாயி பாலகிருஷ்ணன். கஜா புயலின்போது 72 மணி நேரம் மழை நீரை நிலத்தடியில் சேமித்து வைத்த பாலகிருஷ்ணன், ஒரு மணி நேரத்தில், 18 ஆயிரம் லிட்டர் வரை பூமிக்கு அடியில் மழை நீரைச் சேமிக்கலாம் என்று கூறுகிறார். மழை வேண்டி பிரார்த்தனை செய்யும் அரசு, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ஆய்வு செய்து சிஃபான் முறையைப் பயன்படுத்தி மழை நீரையும், வீணாகக் கடலில் கலக்கும் பல லட்சம் கன அடி ஆற்று நீரையும் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைக்கிறார்.