Exclusive பூர்வக்குடிகளை துரத்தும் காட்டு யானை - குலைநடுங்க வைக்கும் காணொலி! - elephant chasing tribal people
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதியில் பல்வேறு பழங்குடியினர் கிராமங்கள் உள்ளது. கோர் ஜோன் எனப்படும் அடர்ந்த வனப்பகுதிக்குள் இந்த கிராமங்கள் உள்ளதால் எந்நேரமும் வனவிலங்குகளின் நடமாட்டம் இங்கு காணப்படும். இவ்வேளையில் முதுமலை அருகேயுள்ள செம்பகொல்லி பழங்குடியினர் கிராமத்தில் இரண்டு நாட்களாக ஆண் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிகிறது. இன்று அந்த ஆண் காட்டு யானை பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ஆண், பெண் என இருவரைத் துரத்தி வரும் காட்சிகளை அங்குள்ள ஒருவர்க் கைப்பேசியில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த பதிவுக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.