சிறுவர்களுடன் சிலம்பம் விளையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர்! - சட்டப்பேரவைத் தேர்தல் 2021
🎬 Watch Now: Feature Video
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுபவரும், தற்போது அதே தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ளவர் ஏ.பி.நந்தகுமார். இந்நிலையில் இன்று (மார்ச். 21) அணைக்கட்டு தொகுதிகுட்பட்ட ஊனை, வாணியம்பாடி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அச்சமயம் அப்பகுதி சிறுவர்களுடன் சேர்ந்து சாலையில் சிலம்பம் சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிறுவர்களுடன் சேர்ந்து திமுக வேட்பாளர் சிலம்பம் விளையாடிய காணொலி தற்போது வைரலாகி வருகிறது.