அருந்ததியின மக்களுடன் நடனமாடி வாக்குச் சேகரித்த திமுக வேட்பாளர்! - தேர்தல் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: சிங்காநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் நா. கார்த்திக் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இன்று நீலிகோணாம்பாளையம் பகுதியில், அருந்ததியினர் மக்களிடையே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மதுரை வீரன் கோவில் அருகே வாக்குச் சேகரித்த நிலையில், அருந்ததியினர் அவர்களின் பாரம்பரிய நடனமாடினர். அவர்களுடன் இணைந்து நா. கார்த்திக்கும் நடனமாடினார். இது அப்பகுதியினரை மகிழ்ச்சி அடைய செய்தது. அதனைத் தொடர்ந்து திமுக வாக்குறுதிகளை எடுத்துக் கூறி வாக்குச் சேகரித்தார்.