மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி: வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு! - Tamil Nadu Silambatta Kazhagam
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் மற்றும் வீரபாண்டியன் சிலம்பாட்ட பள்ளி சார்பில் மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஜூனியர் பிரிவில் 14 முதல் 17 வயது வரையும், சீனியர் பிரிவில் 17 முதல் 25 வயது வரையும் வீரர், வீராங்கனைகள் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெறும் வீரர்கள் வருகின்ற மார்ச் மாதம் 3ஆம் தேதி திருப்பூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.