முதலமைச்சர் பாணியில் கவச உடையுடன் நுழைந்த மாவட்ட ஆட்சியர் - கரோனா தொற்று
🎬 Watch Now: Feature Video
கரூர்: புகளூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்திற்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் கடந்த மே 31ஆம் தேதி திறந்துவைத்தார். இந்த மையத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளை நேற்று (ஜூன் 23) மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பாதுகாப்பு உடை அணிந்து நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் ஏதேனும் குறைகள் இருக்கின்றனவா எனக் கேட்டறிந்தார். இச்சம்பவம் நோயாளிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.