கொடைக்கானலில் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி - continuous rainfall in kodaikanal video
🎬 Watch Now: Feature Video
வங்ககடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகர் பகுதிகளான ஏரிசாலை, கீழ்பூமி, அப்சர்வேட்டரி, பாம்பார்புரம், நாயுடுபுரம், அண்ணாசாலை, கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.