ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: நீலகிரிக்கு கிளம்பினார் முதலமைச்சர் - ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூரில் இருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டன் நோக்கி இன்று (டிசம்பர் 8) விமானப்படைக்குச் சொந்தமான மிக்-17வி5 ரக ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அலுவலர்கள் உள்பட 14 பேர் பயணித்தனர். இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள காட்டேரி மலைப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிழந்தனர். மீதமுள்ள ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூரில் இருந்து சாலை மார்க்கமாக நீலகிரிக்கு விரைந்தார்.