புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி:500 பேர் பங்கேற்பு - மாரத்தான் போட்டி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10445950-thumbnail-3x2-marathon.jpg)
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி இன்று (ஜன.31) நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி நான்காம் தேதி உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பரமக்குடியில் தனியார் உடல் கட்டமைப்பு பயிற்சி அமைப்பு சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாரத்தான் போட்டியை பரமக்குடி நகர் காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்த மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.