நகைக்கடையில் கொள்ளை முயற்சி : காவல்துறை விசாரணை - ஈரோடு மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில், அப்பகுதியைச் சேர்ந்த லியாகத் அலி என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு இவரது நகைக் கடையின் பின்புறம் உள்ள சுவற்றில், சுமார் ஒரு அடிக்கு துளையிடப்பட்டிருந்ததை அப்பகுதியில் இருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது சுவற்றில் துளையிடப்பட்ட இடத்தில் கடப்பாரை, இரும்பு கம்பி ஆகியவை கீழே கிடந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தேடிவருகின்றனர்.