ஈரோடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடுமுடி தாலுகா செயலாளரை கொலைசெய்யும் முயற்சியில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள காரணம்பாளையம் கிராமத்தை் சேர்ந்தவர் கே.பி. கனகவேல். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடுமுடி தாலுகா குழுச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி ஏழு மணி அளவில் காரணம்பாளையம் ரயில்வே பாதையில் அடையாளம் தெரியாத நபர்களால் உருட்டுக்கட்டையால் பலமாகத் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்திய கம்யூனிஸ்ட்தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் இன்று புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை கண்காணிப்பாளர் உறுதி அளித்தார்.