ராமேஸ்வரம் ராமசுவாமி கோயில் ஆடித் திருவிழா கொடியேற்றம்! - Aadibfestival flag off at rameswaram temple
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம் மாவட்ட ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் முக்கிய நிகழ்வான ஆடித்திருக்கல்யாண
திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோயில் இணை ஆணையர் கல்யாணி அறங்காவலர் ராஜா குமரன் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ஜூலை 31ஆம் தேதி ஆடி அம்மாவாசை, அகஸ்ட் 2இல் தேரோட்டம் நடைபெறுகிறது. ராமநாதசுவாமிக்கும் பர்வத வர்த்தினி அம்பாளுக்கும் ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவில் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.