மாதவரத்தில் நள்ளிரவில் சாலையில் வந்த கார் தீயில் எரிந்து நாசம் - சென்னை அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12283293-thumbnail-3x2-carfire.jpg)
சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் செழியன். இவர் நேற்றிரவு தனது காரில் மாதவரம் ரவுண்டானா அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வருவதைக் கண்டு கீழே இறங்கியுள்ளார். ஆனால், காரின் முன்பகுதி மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்துசென்று தீயை அணைத்தனர். இது குறித்து மாதவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.