ராமநாதபுரம் அருகே வெளிமாநில கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு - திடீரென பற்றி எரிந்த கார்
🎬 Watch Now: Feature Video
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர் தனது டாடா இண்டிகா காரில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்பகுதியில் திடீரென புகை வந்துள்ளது. இதைக் கவனித்த விஜய் காரை விட்டு வெளியே இறங்க, கார் மளமளவென தீப்பிடித்து முழுவதும் எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.