உடற்பயிற்சியில் அசத்திவரும் 4 வயது சிறுமி - கின்னஸ் சாதனை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13239470-thumbnail-3x2-girlbaby.jpg)
கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த தீபிகா என்ற 4 வயது சிறுமி உடற்பயிற்சியில் அசத்திவருகிறார். தீபிகா ஒரு நிமிடத்தில் 75 தண்டால் எடுத்து, அப்துல்கலாம் உலகச் சாதனை விருதுபெற்றுள்ளார். இவரை இதே துறையில் ஊக்கப்படுத்தி ஒலிம்பிக் போட்டி வரை கொண்டுசெல்ல அரசு உதவியுடன் செயல்படப்போவதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். மேலும், இவர் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.