மாயூரநாதருக்கு 108 லிட்டர் நெய் அபிஷேகம்! - மயிலாடுதுறை மாயூரநாதருக்கு 108 லிட்டர் நெய் அபிஷேகம்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறையில் பொங்கல் திருநாளையொட்டி 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாயூரநாதர் கோயிலில் இன்று (ஜன.13) பக்தர்கள் அளித்த 108 லிட்டர் நெய் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மஹா தீபாராதனைக்குப் பின்னர் அபிஷேகம் செய்யப்பட்ட நெய் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.