'அரசியலுக்கு சரியான நேரத்தில் வருவேன்' - வரலட்சுமி சரத்குமார் - வெல்வட் நகரம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6286504-618-6286504-1583308261837.jpg)
அறிமுக இயக்குநர் மனோஜ் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'வெல்வட் நகரம்'. உண்மைச் சம்பவம் ஒன்றை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் ரமேஷ் திலக் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். மேக்கர்ஸ் ஸ்டூடியோ தயாரித்துள்ள இப்படத்தை அச்சு ராஜா மணி இசையமைத்துள்ளார். இப்படம் மார்ச் 6ஆம் தேதி திரைக்குவருகிறது.
இதனையடுத்து இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து வரலட்சுமி சரத்குமார் நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில், "ரசிகர்கள் பொதுவாக திரையில் வரலட்சுமி பற்றிய எதிர்பார்ப்பை உடைக்கவே 'வெல்வட் நகரம்' திரைப்படத்தில் புதுமாதிரியான ஒரு கதாபத்திரத்தைத் தேர்வுசெய்தேன். அரசியலுக்கு எப்போது வரவேண்டுமோ அப்போது சரியான நேரத்திற்கு வருவேன். அரசியலில் அப்பாவுடன் பயணிக்க மாட்டேன்" எனக் கூறியுள்ளார்.